• Download mobile app
29 Mar 2024, FridayEdition - 2970
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பொள்ளாச்சியில் தனியார் பள்ளிகளில் அரசு நிர்ணயித்த தொகையை விட அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்

May 21, 2018 தண்டோரா குழு

கோவையை அடுத்த பொள்ளாச்சி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி மாணவர் சேர்க்கைக்கு அரசு நிர்ணயித்த தொகையை விட அதிக கட்டணம் வசூலிப்பதாக நடவடிக்கை எடுக்க கோரி அப்பகுதி மக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளிலும் அரசு நிர்ணயம் செய்த கல்வி கட்டணத்தை விட பல மடங்கிற்கு மேல் கட்டணத்தை வசூலிப்பதாகவும் இதற்கு அரசு நடவடிக்கை எடுக்க கோரி, மானவர்கின் கல்வி உரிமைக்கான கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.

இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 25 % இட ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடமும் கல்வி கட்டணத்தை அனைத்து தனியார் பள்ளிகளிலும் வசூலிக்கப்படுவதாகவும் எனவே மாணவர்கள் இதனால் பாதிக்கப்படுவதால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

மேலும் , தமிழக அரசு நிர்ணயம் செய்த கல்வி கட்டண பட்டியலை பள்ளியின் முகப்பில் பெற்றோர் மாணவர்கள் பார்க்கும் வகையில் வைக்கப்பட வேண்டும் என அரசு உத்தரவிட்டும் இதுநாள் வரை தனியார் பள்ளிகள் அதனை கடைபிடிப்பதில்லை எனவும் புகார் அளித்துள்ளனர்.

மேலும் படிக்க