• Download mobile app
25 Apr 2024, ThursdayEdition - 2997
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

புழல் சிறையில் இருந்து தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் விடுதலை

June 19, 2018 தண்டோரா குழு

சுங்கச்சாவடி,என்எல்சி முற்றுகை வழக்கில் நிபந்தனை ஜாமீன் கிடைத்ததையடுத்து தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன் விடுதலையானார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி மீது தாக்குதல் மற்றும் நெய்வேலி என்.எல்.சியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் கைது செய்யப்பட்டார்.இதன் பின் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவர்,கடலூர் மற்றும் உளுந்தூர்பேட்டை நீதிமன்றங்களில் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்தார்.ஆனால்,அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இதனையடுத்து,வேல்முருகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஜெகதீஸ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது, ஜாமின் வழங்கிய நீதிபதி மறு உத்தரவு வரும் வரை நாகர்கோவில் கோட்டாறு காவல்நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை விதித்து ஆணையிட்டார்.சுங்கச்சாவடி,என்எல்சி முற்றுகை வழக்கில் நிபந்தனை ஜாமீன் கிடைத்ததையடுத்து தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன் இன்று விடுதலையானார்.

மேலும் படிக்க