• Download mobile app
28 Mar 2024, ThursdayEdition - 2969
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பத்ம விபூஷண் விருது பெற்றார் இசையமைப்பாளர் இளையராஜா

March 20, 2018 தண்டோரா குழு

இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு பத்ம விபூஷண் விருதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.

கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை உள்ளிட்ட துறைகளில்சிறப்பாகப்பணியாற்றிவருபவர்களுக்குஆண்டுதோறும்குடியரசுதினத்திற்குமுன்பாகபத்மவிருதுகள்அறிவிக்கப்படுவதுண்டு. கடந்த1954-ம் ஆண்டு முதல் இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, 2017-ம் ஆண்டுக்கான பத்ம விருது பெறுபவர்கள் குறித்த அறிவிப்பு இன்று (25.1.2018) வெளியிடப்பட்டிருக்கிறது. இதில், 80-க்கும் மேற்பட்டவர்களுக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, நாட்டின் இரண்டாவது உயரிய விருதாகக் கருதப்படும் பத்ம விபூஷண்விருது இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு அறிவிக்கப்பட்டது. இசைத்துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பைக் கௌரவிக்கும்விதமாக இவ்விருது அவருக்கு அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், டெல்லியில் உள்ள குடியரசுத்தலைவர் மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் விழா தொடங்கியது. இதில்,இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு பத்ம விபூஷண் விருதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார். இவ்விழாவில் பிரதமர் மோடி, துணைப் பிரதமர் வெங்கய்யா நாயுடு மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க