• Download mobile app
20 Apr 2024, SaturdayEdition - 2992
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நெல்லையில் கந்துவட்டி கொடுமையால் தீக்குளித்து 3 பேர் உயிரிழந்த வழக்கில் 3 பேர் கைது

October 23, 2017 தண்டோரா குழு

நெல்லையில் கந்துவட்டி கொடுமையால் தீக்குளித்து 3 பேர் உயிரிழந்த வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைப்பெற்றது. அப்போது, நெல்லை மாவட்டம் காசிதர்மம் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி இசக்கிமுத்து, தனது மனைவி சுப்புலட்சுமி,மகள்கள் 5 வயது மதிசரண்யா, ஒன்றரை வயதுள்ள அட்சய பரணியா ஆகியோர் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்ற அரங்கு முன்பு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ குளித்தனர்.

இதையடுத்து அங்கிருந்தவர்கள் தீயை அணைத்தனர்.எனினும் 2 குழந்தைகள் உட்பட நான்கு பேரும் ஆபத்தான நிலையில் மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.இந்நிலையில்,மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுப்புலட்சுமி மற்றும் இரண்டு மகள்களும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதற்கிடையில், கந்துவட்டி கொடுமையால் 4 பேர் தீக்குளித்த சம்பவத்தில் 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், கந்துவட்டிகாரர்கள் முத்துலட்சுமி அவரது கணவர் தளவாய்ராஜ், காளி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் படிக்க