• Download mobile app
18 Apr 2024, ThursdayEdition - 2990
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நியூயார்கைவிட 33 மடங்கு பெரிய நகரத்தை உருவாக்குகிறது சவூதி அரேபியா !

February 24, 2018 தண்டோரா குழு

சவூதி அரேபியா அரசு 5௦௦ பில்லியன் டாலர் செலவில் நியூயார்க் நகரை விட  33 மடங்கு பெரிய நகரத்தை உருவாக்கவுள்ளது.

ஜோர்டான் மற்றும் எகிப்த் நாட்டை இணைப்பது போல் சவூதி அரேபியா  ஒரு பெரிய நகரத்தை உருவாக்க உள்ளதாக சவூதி இளவரசர் முகம்மது பின் சல்மான் அறிவித்துள்ளார். இந்நகரம் 5௦௦ பில்லியன் டாலர் செலவில் கட்டமைக்க உள்ள இந்த நகரம் முழுவதும் புதுப்பிக்கூடிய ஆற்றலைக் கொண்டு இயங்க உள்ளது. இந்நகரம் 1௦,23௦ சதுர மைல் பரப்பளவில், அதாவது நியூயார்க் நகரை விட 33 மடங்கு பெரிய நகரமாக உருவாக உள்ளது.

இதுமட்டுமின்றி இந்நகரம் முழுக்க முழுக்க தொழில் துறைவளர்ச்சிக்காகவும், வணிகத்திற்காக மட்டுமே கட்டமைக்கப் படுகிறது. இந்த நகரம் அமைக்கும் திட்டத்தின் பெயர் NEOM என்றும் இந்த திட்டத்தை செயல்படுதுவதற்க்கான நிதியை சவூதிஅரேபியா அரசும், தனியார் முதலீட்டாளர்களும் சேர்ந்து அளிக்கவுள்ளனர். இந்த திட்டத்தின் படி சவூதி எண்ணை மீதான சார்பு நிலையைக்குறைத்து, உணவு, ஆற்றல், உயிரியல் தொழில்நுட்பம், மேம்பாட்டு உற்பத்தி மற்றும் பொழுதுபோக்கு சார்ந்து தனது ஈடுபாட்டை காட்டவே இந்த நகரம் கட்டமைக்கபட  உள்ளது.

இந்த திட்டத்தைப்பற்றி பத்திரிக்கையாளர் கூறுகையில்,

அமெரிக்காவில் உள்ள பௌர்லிங்டன், வேர்மொன்ட் போன்ற பெரிய நகரங்கள் புதுபிக்ககூடிய ஆற்றல்லை கொண்டு இயங்கி வருகிறது.    அதே போல் நோர்வே மற்றும் அயர்லாந்து நாட்டில் கூட இயற்கை வளங்களைக்கொண்டு இயங்கும் நகரங்கள் உள்ளது.  தற்போது, NEOM திட்டத்தின் படி நகரம் அமைக்கப்பட்டாலும் அதுவும் இயற்கை வளங்களைக்கொண்டு இயங்கும் ஒரு மாபெரும் நகரமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

இந்த நகரம் 2௦25ஆம் ஆண்டு தயாராகிவிடும் என்று  தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க