• Download mobile app
23 Apr 2024, TuesdayEdition - 2995
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தூத்துக்குடி மக்கள் அச்சப்பட வேண்டாம் – டிஜிபி டிகே ராஜேந்திரன்

May 22, 2018 தண்டோரா குழு

போராட்டம் தொடர்பாக தூத்துக்குடி பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என டிஜிபி டிகே ராஜேந்திரன் கூறியுள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூத்துக்குடி மக்கள் இன்று கடையடைப்பு,கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்,பேரணி என அடுத்தடுத்து போராட்டங்களை மேற்கொண்டனர்.

இதன் ஒரு பகுதியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக சென்ற ஆயிரக்கணக்கானோரை மடத்தூர் என்ற இடத்தில் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் போராட்டகாரர்களுக்கும் போலீசாருக்கும் மோதல் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து தடையையும் மீறி தூத்துக்குடி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் நுழைந்து முற்றுகையிட்டனர்.போராட்டகாரர்களை காவல்துறையால் தடுக்க முடியாததால், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.இதனால் பதிலுக்கு ஆட்சியர் அலுவலகம் மீது பொதுமக்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.இதில் ஆட்சியர் அலுவலக கண்ணாடி உடைந்து நொறுங்கியது.ஆட்சியர் அலுவலகம் மீதே தாக்குதல் நடத்தப்பட்டதால் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

இதற்கிடையில்,போராட்டக்களத்தில் போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் பொதுமக்களில் 3 பேர் உயிரிழந்ததாக கூறப்டுகிறது.மேலும் பலர் மண்டை உடைந்து காயம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில்,போராட்டம் தொடர்பாக தூத்துக்குடி பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். துப்பாக்கிச்சூடு நடந்ததா என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது.தூத்துக்குடியில் நிலையை கட்டுக்குள் கொண்டுவர கூடுதல் போலீஸார் அனுப்பப்பட்டுள்ளனர் என டிஜிபி டிகே ராஜேந்திரன் கூறியுள்ளார்.

மேலும் படிக்க