• Download mobile app
23 Apr 2024, TuesdayEdition - 2995
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

‘சுகாதாரத் துறை அமைச்சர், கொலை குற்றவாளி அமைச்சர்’ – மு.க ஸ்டாலின்

June 28, 2017 தண்டோரா குழு

உயிரை காப்பாற்ற வேண்டிய சுகாதாரத் துறை அமைச்சர், கொலை குற்றவாளி அமைச்சராக உள்ளார். அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக செயல் தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான மு.க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தலைமை செயலருக்கு வருமான வரித்துறை எழுதியுள்ள கடிதம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் தி.மு.க.,கோரிக்கை விடுத்தனர். இதற்கு சபாநாயகர் தனபால் அனுமதி மறுத்துவிட்டார். இதனை கண்டித்து தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் ஸ்டாலின் கூறியதாவது;

“தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள், குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை நிறுவனங்களிடம் லஞ்சம் பெற்றதாகவும், இது குறித்து நடவடிக்கை எடுக்கும்படி தலைமை செயலருக்கு வருமான வரித்துறை கடிதம் எழுதியுள்ளதாகவும் செய்திகள் வெளியானது.

வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றிய ஆவணங்களில், யார் யாருக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டது என்ற விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி., ராஜேந்திரன், தீயணைப்பு துறை டி.ஜி.பி. ஜார்ஜ் பெயர் இடம் பெற்றுள்ளது.

இவர்களுக்கு ரூ.40 கோடி லஞ்ச பணம் கொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என வருமான வரித்துறை சார்பில், தலைமை செயலருக்கு கடிதம் அனுப்பியுள்ளது. ஆனால், 10 மாதமாகியும், இதுவரை தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இது குறித்த செய்தி பத்திரிகைகளில் வெளியாகியுள்ளது. ஆர்கே நகர் இடைத்தேர்தல் சோதனையின் போதும் கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் இடம்பெற்றவர்களின் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை.

குட்கா நிறுவனம் சார்பில், போலீஸ் கமிஷனருக்கு தீபாவளி மாமூல் ரூ.15 லட்சம், கிறிஸ்துமஸ் மாமூல் ரூ.14 லட்சம் கொடுக்கப்பட்டது. இது குறித்து சட்டப்பேரவையில் ஒத்திவைப்பு தீர்மானம் அளித்தும்,சபாநாயகர் பேச அனுமதிக்கவில்லை.

சுகாதார அமைச்சர், மக்கள் உடல் நலன் சார்ந்த பிரச்னையில் துரோகம் செய்துள்ளார். உயிரை காப்பாற்ற வேண்டிய அமைச்சர் கொலை குற்றவாளி அமைச்சராக உள்ளார். அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.”

இவ்வாறு அவர் கூறினார்

மேலும் படிக்க