• Download mobile app
24 Apr 2024, WednesdayEdition - 2996
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

‘சான்றிதழ் பெற நீச்சல் தெரிந்திருக்க வேண்டும்’ – சீனப் பல்கலைக்கழகம்

March 29, 2017 தண்டோரா குழு

பட்டப்படிப்பு சான்றிதழ் பெற வேண்டுமென்றால் கண்டிப்பாக நீச்சல் தெரிந்திருக்க வேண்டும் என்று மாணவர்களுக்கு சீனப் பல்கலைக்கழகம் நிபந்தனை விதித்துள்ளது. இந்த புதிய நிபந்தனை பலரையும் புருவம் உயர்த்த செய்துள்ளது.

சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஹார்வர்ட் பல்கலைக்கழகம் என்று அழைக்கப்படும் ‘டிசிங்குவா’ பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. அதில் புதிதாக சேரும் மாணவர்கள் தங்கள் இளநிலை பட்டம் பெற நீச்சல் கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும் அல்லது அதை கற்று அதில் வெற்றிபெற வேண்டும் என அறிவித்துள்ளது.

1919-ம் ஆண்டு, நீச்சல் தெரிந்தவர்களுக்கு மட்டுமே பட்டம் வழங்கப்படும் என்று புதிய முறையை அறிமுகப்படுத்தியது. அதன் பின்னர் பெய்ஜிங் நகரில் நீச்சல் குளங்கள் குறைந்து விட்டதால், இந்த பழக்கம் கைவிடப்பட்டது.

“பல்கலைக்கழகத்தில் சேர்ந்த மாணவர்கள் நீச்சல் தேர்வில் தோல்வி அடைந்தால், அவர்கள் இந்த செப்டம்பர் மாதம் முதல் நீச்சல் வகுப்பிற்கு செல்ல வேண்டும்” என்று அந்நாட்டின் உள்ளூர் செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.

இந்த பல்கலைக்கழகத்தின் தலைவரான கியூ யாங் கூறுகையில், “நீச்சல் உடல் தரத்தை மேம்படுத்தும் உடற்பயிற்சி ஆகும். குறைந்தது 5௦ மீட்டர் நீச்சல் அவர்களால் அடிக்க முடியும் என்று அறிந்துக்கொள்ளவே இந்த தேர்வுகள் நடத்தப்படுகிறது” என்றார்.

இந்த அறிக்கை திங்கள்கிழமை(மார்ச் 27) வெளியானது. இதை தொடர்ந்து சமூக வலைதாலத்தில் பட்டிமன்றமே நடந்து வருகிறது. பலருடைய உயிரை காக்க இந்த திறமை அவசியம் என்று இந்த அறிக்கையை பலர் பாராட்டி வருகின்றனர். அதே சமயம், உள்நாட்டு நகரங்களிலிருந்து வரும் மாணவர்களிடம் நீச்சல் திறமை உள்ளதா? என்று எதிர்பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்? என்று வேறு சிலர் கேட்கின்றனர்.

இது குறித்து கருத்து தெரிவித்த ஒருவர், “பிரபலமான பல்கலைக்கழகமாக இருந்தாலும், அதற்காக இது போன்ற தன்னிச்சையான விதிகளை விதிக்கக்கூடாது” என்றார்.

அந்த பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களும் இந்த பரீட்சையை சந்திக்க வேண்டியிருந்தது. அதேபோல், 1915-ம் ஆண்டு அந்த பல்கலைக்கழகத்தில் படித்த சீனாவின் பிரபல எழுத்தாளர் லியாங் ஷி சியு, பட்டம் பெறுவதற்கு முன் நீச்சலில் தோல்வியுற்று, இரண்டாவது முறையாக முயற்சி செய்து வெற்றிபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க