• Download mobile app
16 Apr 2024, TuesdayEdition - 2988
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் வாங்காத கடனை வட்டியுடன் அடைக்க சொன்ன தனியார் வங்கியை முற்றுகையிட்ட வாடிக்கையாளர்கள்

November 12, 2018 தண்டோரா குழு

கோவையில் வாங்காத கடனுக்கு வட்டியுடன் சேர்த்து அசலையும் கட்டுமாறு தனியார் வங்கி நோட்டீஸ் அனுப்பியதால் வங்கியை வாடிக்கையாளர்கள் இன்று
முற்றுகையிட்டனர்.

கோவை RS புரம் பகுதியில் செயல்பட்டு வரும் “கேப்பிடல் பஸ்ட்”என்னும் தனியார் நிதி நிறுவனம் தனிநபர் கடன், மற்றும் இரண்டு சக்கர,நான்கு சக்கர வாகனங்களுக்கான கடன், வீட்டு உபயோகப் பொருட்களுக்கான கடன் போன்ற கடன் உதவிகளை செய்து வருகிறது. ஆனால் இந்த தனியார் நிதி நிறுவனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்து வருவதாக பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கோவையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தை இன்று காலையில் முற்றுகையிட்டனர்.
கோவை செல்வபுரம் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவர் தனது அவசர தேவைக்காக நான்கு சக்கர வாகன கடன் உதவி வேண்டும் என்று வங்கியை நாடி உள்ளார். கடந்த மூன்று மாதங்களாக இவருக்கு கடனுதவியை தராமல் இவர் கொடுத்த வங்கி காசோலை பயன்படுத்தி மாதாமாதம் 38,000 ரூபாய் வங்கியிலிருந்து பணம் எடுத்து உள்ளது இந்த தனியார் நிதி நிறுவனம்.

இது குறித்து கடந்த மூன்று மாதங்களாக பாலசுப்பிரமணியம் தனியார் நிதி நிறுவன அலுவலர்களிடம் கேட்டபோது அவருக்கு சரியான விளக்கம் அளிக்காமலும் மிரட்டும் தோணியில் பேசி அனுப்பியுள்ளனர். நான்காவது மாதமாக இந்த மாதமும் வங்கி கடனுதவி வழங்காமல் ஆனால் மாத தவணையை கட்டச்சொல்லி வக்கீல் நோட்டீஸ் மட்டும் அனுப்பியுள்ளது. இதனால் கோபமடைந்த பாலசுப்பிரமணியன் தனது நண்பர்களுடன் வங்கி கிளையை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பாலசுப்பிரமணியன் உடன் இணைந்து ஏராளமான பொதுமக்களும் இந்த நிறுவனத்தால் தாங்களும் பாதிக்கப்பட்டதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அப்பாவி பொதுமக்கள் அவசர தேவைக்காக இதுபோன்ற தனியார் நிதி நிறுவனங்களை அணுகுகின்றனர் குறைந்த தொகையை கொடுத்து விட்டு,அவர்களின் பலவீனத்தைப் பயன்படுத்தி பல மடங்கு கொடுத்த தொகைக்கு மேல் வசூல் செய்யும் இதுபோன்ற தனியார் நிதி நிறுவனங்களை மத்திய மாநில அரசுகள் கட்டுப்படுத்த வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.

மேலும் படிக்க