• Download mobile app
27 Apr 2024, SaturdayEdition - 2999
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் பெண் கொலை வழக்கில் அமைச்சர் விஜயபாஸ்கர் மாமனார் வீட்டில் ஓட்டுநராக பணியாற்றிய மணிவேல் கைது

May 21, 2018 தண்டோரா குழு

கோவையில் பெண் வழக்கில் அமைச்சர் விஜயபாஸ்கர் மாமனார் வீட்டில் ஓட்டுநராக பணியாற்றிய மணிவேல் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜெயந்தி. இவரை காணவில்லை என அவரது கணவர் சிவகுமார் கடந்த 18-ந் தேதி ராமநாதபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அப்புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் கோவை சிங்காநல்லூர் குளத்தேரி அருகே உள்ள பிளேக் மாரியம்மன் கோவில் அடுத்த சாக்கடை கால்வாயில் சாக்கு மூட்டையில் கட்டப்பட்டு சடலம் ஒன்று கிடப்பதாக சிங்காநல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, அங்கு சென்ற சிங்காநல்லூர் காவல்நிலைய போலீசார் அழுகிய நிலையில் கழுத்தில் கயிற்றால் இறுக்கி கொலை செய்யப்பட்டவாறு சாக்கு மூட்டையில் இருந்த சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், போலீசார் நடத்திய விசாரணையில் அது ஏற்கனவே காணாமல் போன ஜெயந்தி என்பது தெரியவந்தது. அதைபோல் தகாத உறவு காரணமாக அப்பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்தது.

இதையடுத்து மனைவி காணவில்லை என புகாரளித்த கணவர் சிவகுமாரிடம் ராமநாதபுரம் காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஜெயந்தி ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் சாலையிலுள்ள சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் மாமனார் வீட்டில் வேலை செய்து வந்ததும் சில நாட்களாக அங்கு பணியாற்றி வந்த ஓட்டுநர் மணிவேலுவுக்கும் ஜெயந்திக்குமிடையே பழக்கம் இருந்ததும் தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து, மணிவேலை பிடித்து விசாரித்ததில் ஜெயந்தி மீது மோகம் கொண்டு அவரை பலாத்காரப்படுத்த முயன்றதாகவும் அவர் ஒத்துழைக்காததால் வீட்டிற்கு அருகே உள்ள மறைவான இடத்தில் வைத்து கடந்த 18 ம் தேதி இரவு நைலான் கயிற்றால் ஜெயந்தியின் கழுத்தை நெறித்து கொலை செய்து அவர் அணிந்திருந்த நான்கு சவரன் சங்கிலியை கொள்ளையடித்ததுடன் உடலை சாக்கு பையால் கட்டி தனது இரு சக்கர வாகனம் மூலம் கொண்டு சென்று குளத்தேரி சாக்கடை கால்வாயில் வீசி சென்றதாகவும் மணிவேல் ஒப்பு கொண்டுள்ளார்.

இதனையடுத்து, மணிவேலை கைது செய்துள்ள போலீசார் இக்கொலை சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் தீவிர விசாரணையில் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க