• Download mobile app
23 Apr 2024, TuesdayEdition - 2995
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் பலத்த காற்று , இடி மின்னலுடன் கனமழை

May 22, 2018 தண்டோரா குழு

கோவையில் பலத்த காற்று,இடி,மின்னலுடன் மாநகர மற்றும் புறநகரப் பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் குழுமையான சூழல் நிலவுகிறது.

கோடை காலம் துவங்கியதிலிருந்து வெயில் கடுமையாக சுட்டெரித்து வந்தாலும்,ஓரிரு நாட்கள் விட்டு விட்டு மழை பெய்து வந்தது.இந்நிலையில்,அக்னி நட்சத்திரம் துவங்கியதிலிருந்து தொடர்ந்து மாலை நேரங்களில் கோவை மாவட்டம் முழுவதும் கனமழை பெய்தது.கடந்த இரு நாட்களாக மழை இல்லாத நிலையில்,மீண்டும் இன்று கடந்த ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடி,மின்னலுடன்,காந்திபுரம், பீளமேடு,ராமாநாதபுரம்,ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட நகரப்பகுதிகளில் மட்டுமின்றி, கவுண்டம்பாளையம்,துடியலூர்,சூலூர் போன்ற புறநகரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. காலை முதல் வெயில் சுட்டெரித்து உஷ்ணமாக இருந்த நிலையில்,இரவு கன மழை பெய்வதால் குழுமையான சூழல் நிலவுகிறது.

கோவையில் தொடர்ச்சியாக மழை பெய்தாலும் காலை நேரங்களில் வெயிலின் தாக்கம் இருப்பதால், புழுக்கம் அதிகமாக இருக்கிறது.மழை,காற்று காரணமாக பல்வேறு இடங்களில் மின்வெட்டு இல்லை.மழை பெய்யும் போதெல்லாம் பல்வேறு இடங்களில் ஏற்படும் மின்வெட்டு இரவு முழுவதும் நீடித்து, காலையிலேயே வருவதால் பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.

மேலும் படிக்க