• Download mobile app
25 Apr 2024, ThursdayEdition - 2997
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் தடை செய்யப்பட்ட 300 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்

November 12, 2018 தண்டோரா குழு

கோவை தாமஸ் வீதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட 300 கிலோ குட்கா பொருட்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கோவை தாமஸ் வீதி அடுத்த பொரிக்கார சந்து பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான்பராக் மற்றும் குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக உணவு பாதுகாப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமையிலான குழுவினர் சோதனை மேற்கொண்டனர். அதில் அப்பகுதியில் வசித்து வரும் வடமாநிலத்தை சேர்ந்த வாகாராம் என்பவருக்கு சொந்தமான
குடோனுக்கு சீல் வைத்தனர்.

இதனைத்தொடர்ந்து குடோனை திறந்து அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 300 கிலோ எடையிலான பான்பராக், குட்கா மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.மேலும் குடோன் உரிமையாளரான வாகராம் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் தனது பொருட்கள் இல்லை எனவும் குடோனை வேறு ஒருவருக்கு வாடகைக்கு விட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஆனால் வாகாராம் ஏற்கனவே மீது குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து இதேபோல் பதுக்கலில் ஈடுபட்டு வரும் அவர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி விஜயலலிதாம்பிகை தெரிவித்தார்.

மேலும் படிக்க