• Download mobile app
20 Apr 2024, SaturdayEdition - 2992
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கர்நாடக மாநில முதலமைச்சராக குமாரசாமி பதவியேற்றார்

May 23, 2018 தண்டோரா குழு

கர்நாடக மாநில முதலமைச்சராக மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவர் குமாரசாமி இன்று பதவியேற்று கொண்டார்.

கர்நாடக ஆளுநர் வஜீபாய் வாலா பதவிப் பிரமாணம் செய்து வைத்துள்ளார்.
கர்நாடகாவில் நடந்து முடித்த சட்டபேரவை தேர்தலில் பாஜக 104 இடங்களிலும், காங்கிரஸ் 78 இடங்களிலும், மஜத 38 இடங்களிலும் வெற்றி பெற்றது. யாருக்கும் பெருபான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து, ஆளுநர் அழைப்பின் பேரில் ஆட்சியமைத்த பாஜக பெரும்பான்மை நிரூபிக்க முடியாமல் ஆட்சியை இழந்தது. இதனால், காங்கிரஸ் – மஜத கூட்டணி ஆட்சியமைக்க குமாரசாமிக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார்.

இதையடுத்து, கர்நாடக மாநில முதலமைச்சராக மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவர் குமாரசாமி இன்று பதவியேற்றார்.அவருக்கு கர்நாடக ஆளுநர் வஜீபாய் வாலா பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். துணை முதல்வராககாங். தலைவர் பரமேஸ்வராபதவியேற்றுக் கொண்டார்.

இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, மாயாவதி, அகிலேஷ் யாதவ்,கேரள முதல்வர் பினராயி விஜயன், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுஉள்ளிட்டபல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

மேலும் படிக்க