• Download mobile app
24 Apr 2024, WednesdayEdition - 2996
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

துருக்கியில் இரவு விடுதியில் 39 பேரைச் சுட்டுக் கொன்ற நபர் கைது

January 17, 2017 தண்டோரா குழு

துருக்கி நாட்டின் தலைநகர் இஸ்தான்புல் இரவு விடுதியில் 39 சுட்டுக் கொன்ற நபரைத் துருக்கி காவல் துறையினர் கைது செய்தனர்.

கடந்த டிசம்பர் 31ம் தேதி இரவு புத்தாண்டைக் கொண்டாட இரவு விடுதி ஒன்றில் 5௦௦ பேர் திரண்டு மகிழ்ச்சியுடன் ஆட்டம், பாட்டம் என்று உற்சாகத்துடன் கொண்டாடி கொண்டிருந்த நேரத்தில் நள்ளிரவு 1.3௦ மணியளவில் தானியங்கி ரக துப்பாக்கியுடன் நுழைந்த ஒருவர் கண்ணில் பட்டவர்களையெல்லாம் கண்மூடித்தனமாகச் சுட்டார்.

இந்தச் சம்பவத்தில் 39 உயிரிழந்தனர். நாற்பதுக்கும் மேலானோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். காயமடைந்தவர்களில் 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இஸ்தான்புல் காவல் துறையினர் புத்தாண்டு தின கொண்டாடத்தின் 39 பேரைச் சுட்டுக் கொன்ற மனிதரை போலீசார் கைது செய்தனர். ஏபு முஹம்மத் ஹோரசினி என்ற பொய்யான பெயரின் கீழ் வந்த அந்த நபரையும் அவரது மகனையும் துருக்கி நாட்டிற்கும் ஐரோப்பிய நாட்டின் எல்லைப் பகுதியில் போலீசார் கைது செய்துள்ளனர்.

சிரியா நாட்டில் துருக்கி ராணுவத்தினர் நடத்திய தாக்குதலுக்குப் பழி வாங்கவே ஐஎஸ் அமைப்பு நடத்திய தாக்குதல் என்று அறிக்கை விடப்பட்டிருந்தது. அதையடுத்து பலர் கைது செய்யப்பட்டனர்.

இச்சம்பவத்தில் துருக்கி, அரபு, இந்தியா, கனடா நாட்டை சேர்ந்தவர்கள் உயிரிழந்தனர்.

மேலும் படிக்க