• Download mobile app
25 Apr 2024, ThursdayEdition - 2997
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அடர்ந்த காட்டுக்குள் ஓடி ஒழிந்தவரை மோப்பநாய் உதவியுடன் மீட்பு…

June 21, 2018 தண்டோரா குழு

நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்(வயது 48).இவர் அதே பகுதியை சேர்ந்த சங்கரன் என்பவருக்கு சொந்தமான பொக்காபுரம் பகுதியில் உள்ள விவசாய பூமியை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார்.இவர் விவசாயம் செய்யும் நிலம் அடர்ந்த வன பகுதியை ஒட்டு உள்ளது.

இவர் நேற்று முன்தினம் திடீரென மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் பொக்காபுரம் காட்டுக்குள் போல் ஓடியுள்ளார்.இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை தடுத்து நிறுத்தியுள்ளனர்.ஆனால் இவர் அதை எல்லாம் கேட்காமல் காட்டுக்குள் ஓடியுள்ளார்.சம்பவத்தை பார்த்தவர்கள் மசினகுடி காவல் நிலையத்தில் தகவல் அளித்தனர்.

இதனை தொடர்ந்து மசினகுடி காவல் கண்காணிப்பாளர் முரளிதரன் துணை காவல் கண்காணிப்பாளர் சம்பத்குமாரிடம் அவரை தேடும் பணியை ஒப்படைத்தார்.ராமகிருஷ்ணன் காட்டுக்குள் சென்றிருப்பதால் அவரை தேடி கண்டு பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது.அடர்ந்த வன பகுதி மட்டுமின்றி வனவிலங்குகள் நடமாடும் பகுதி என்பதால் ராமகிருஷ்ணன் உயிருக்கு ஏதும் ஆபத்து ஏற்படலாம் என கருதிய காவல் துறையினர் மோப்ப நாயை கொண்டு தேடுவதற்காக மோப்ப நாய் நிபுணர் வடிவேல் என்பவரின் உதவியை நாடினர்.நேற்று காலை மோப்பநாய் ‘அப்பர் ‘உதவியுடன் ராமகிருஷ்ணனை தேடும் பணியில் இறங்கினர்.

ராமகிருஷ்ணன் ஓடியதாக கூறப்படும் இடத்தில் தேடும் பணியை மேற்கொண்டனர்.ஆனால்,மோப்ப நாய் தொடர்ந்து சென்றுகொண்டிருந்த பாதையில் யானைகள் இருந்ததால் தேடும் பணியில் இருப்பவர்களுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது என கூறி தேடும் பணியை தற்காலிகமாக கை விட்டனர்.

இதனைத்தொடர்ந்து காவல் துறை மற்றும் வனத்துறையினர் இன்று காலை 6 மணி முதல் மீண்டும் தேடும் பணியை தொடங்கினர்.இந்நிலையில்,மாடு மேய்த்துக்கொண்டிருந்தவர் சிங்கரா அருகே ராமர் கோயில் அருகே ஒருவர் காட்டுக்குள் ஓடுவதாக தகவல் அளித்துள்ளார்.அதனை தொடர்ந்து மோப்ப நாய் உதவியுடன் அப்பகுதியில் தேடும் பணியை மேற்கொண்டனர்.காட்டுக்குள் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் மோப்பநாய் உதவியுடன் சென்ற காவல் துறையினர் மற்றும் வனத்துறையினர் ராமகிருஷ்ணன் ஒரு புதருக்குள் படுத்திருந்ததை கண்டு அவரை மீட்டனர்.காட்டுக்குள் ஓடியவரை ஆபத்தில் இருந்து சாமர்த்தியமாக காப்பாற்றிய வனத்துறையினர் மற்றும் காவல் துறையினருக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

மேலும் படிக்க