FLASH NEWS
  • முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உறவினர் வீடுகளில் நடந்த சோதனையில் ரூ.1.2 கோடி பறிமுதல்
  • கிருஷ்ணகிரியில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்
  • கமலின் உறுதி இறுதி வரை இருக்க நடிகர் விவேக் வாழ்த்து!
  • பேரறிவாளனின் பரோல் மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவு
  • இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணை அக்டோபர் 6ம் தேதி நடைபெறும்: தேர்தல் ஆணையம்

மிஷின் 24 திட்டத்தை தொடங்கி வைத்தார் சச்சின் டெண்டுல்கர்

September 13, 2017 தண்டோரா குழு

மும்பையில் மிஷின் 24 என்னும் புதிய திட்டத்தை முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் இன்று(செப் 13)தொடங்கி வைத்தார்.

மும்பையின் “Brihanmumbai municipal Corporation” நிறுவனம், இரண்டு தன்னார்வ தொண்டு நிறுவங்களுடன் இணைந்து மிஷன் 24 என்னும் புதிய திட்டத்தை உருவாக்கினர்.

இத்திட்டத்தின் கீழ், மும்பையில் உள்ள சிவாஜி நகர், தியோனர் மற்றும் மான்கர்த் பகுதியைச் சேர்ந்த சேரி மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படும்.மேலும்,பள்ளிகள், கல்லூரிகள், மகப்பேறு மருத்துவமனை, சுகாதார மையங்கள், மருந்தகங்கள் ஆகியவையை ஏற்படுத்தி தருவது இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும்.

இதுக்குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கூறுகையில்,

“மும்பையிலுள்ள சேரி பகுதிகள் வளர்ச்சி அடையாமல், மிகவும் பின் தங்கிய நிலையில் இருப்பது மிகுந்த கவலையளிக்கிறது. தற்போது புதிதாக தொடங்கியிருக்கும் மிஷன் 24 திட்டம் மூலம் மக்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்”

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க