FLASH NEWS
  • முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்
  • முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது
  • கேரள மாநிலத்தில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து மத்திய அரசு அவசர ஆலோசனை
  • நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், நெல்லை மாவட்ட மலைப்பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு

மற்ற மாநிலங்கள் போல ஆட்சி அமைப்பதில் முறைகேடு கூடாது – பரமேஸ்வரா, குமாரசாமி கூட்டாக பேட்டி

May 16, 2018 தண்டோரா குழு

மற்ற மாநிலங்கள் போல் கர்நாடகாவில் ஆட்சி அமைப்பதில் முறைகேடு நடந்துவிடக்கூடாது என அம்மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரா, மஜத தலைவர் குமாரசாமி கூறியுள்ளனர்.

கர்நாடகத்தில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் காங்கிரஸ் – ஜேடிஎஸ் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளது. இதைடுத்து மஜத தலைவர் குமாரசாமி கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலாவை சந்தித்து. காங்கிரஸ், மஜத சேர்ந்த 117 எம்.எல்.ஏக்கள் ஆதரவு கடிதத்தை அளித்து ஆட்சி அமைக்க குமாரசாமி உரிமை கோரினார். அவருடன் காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரா, மூத்த தலைவர் வீரப்ப மொய்லி உள்ளிட்டோரும் சென்றனர்.
ஆளுநரிடம் கடிதத்தை அளித்துவிட்டு குமாரசாமியும் , காங்கிரஸ் மாநில தலைவர் பரமேஸ்வர் ஆகியோர் கூட்டாக பேட்டி அளித்தனர்.

அப்போது பேசிய அவர்கள்,

117 எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் கொடுத்துள்ளோம். தேர்தலுக்கு பிந்தைய கூட்டணிக்கு பெரும்பான்மை உண்டு. இதனால் ஆட்சி அமைக்க எங்களைத்தான் ஆளுநர் அழைக்க வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்புப் படி ஆளுநர் செயல்பட வேண்டும். சட்ட வல்லுநர்களுடன் ஆலோசிப்பதாக ஆளுநர் கூறியுள்ளார். மேலும் சரியான முடிவை எடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மற்ற மாநிலங்கள் போல ஆட்சி அமைபதில் முறைகேடு கூடாது. அரசியல் சாசன சட்டத்துக்குட்பட்டு ஆளுநர் நடக்க வேண்டும். இரு கட்சி எம்எல்ஏக்களும் யாரும் அணி தாவவில்லை. மஜதவுக்கு காங்கிரஸ் நிபந்தனையற்ற ஆதரவை தந்துள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க