• Download mobile app
13 Dec 2018, ThursdayEdition - 1037
FLASH NEWS
  • சென்னை முழுவதும் 1.50 லட்சம் சிசிடிவி கேமரா : 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு..
  • ரூ.4 லட்சம் கோடி மதிப்பிலான விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்!
  • புதிய தலைமைச் செயலக வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றிய அரசாணை ரத்து

பிப். 15ம் தேதி தமிழக அமைச்சரவைக்கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல்

February 13, 2018 தண்டோரா குழு

தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை மறுநாள் (பிப்.,15ம் தேதி) கூடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதல்வர் பழனிசாமி பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் தமிழக அமைச்சரவை கூட்டம் பிப்.15 ம் தேதி கூடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் பட்ஜெட்டில் பல்வேறு துறைகளுக்கு ஒதுக்க உள்ள நிதி, மானியக் கோரிக்கைகள் மற்றும் புதிய திட்டங்கள் குறித்து கலந்தாலோசித்து, கருத்து கேட்கப்பட உள்ளது. மேலும், அரசின் சாதனைகள் தொடர்பாக ஆண்டு மலர் வெளியிடுவது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இதுமட்டுமின்றி வரும் 24ம் தேதி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாள் வர உள்ள நிலையில், நினைவு மண்டபத்திற்கான பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

 

 

மேலும் படிக்க