FLASH NEWS
  • தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் 5 பேரை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவு
  • ஆர்.கே.நகர் தொகுதிக்கு டிசம்பர் 21இல் இடைத்தேர்தல்
  • டிசம்பர் 5 ல் ஜெயலலிதா நினைவு தின அமைதி ஊர்வலம், அஞ்சலி நடைபெறும்: ஈபிஎஸ்- ஓபிஎஸ்
  • தமிழில் படித்தோருக்கு அரசு வேலையில் 20% முன்னுரிமை அளிக்கும் அரசாணையை கட்டாயம் பின்பற்ற வேண்டும்

நம்பிக்கை வாக்கெடுப்பு – திமுக மனு நாளை விசாரணை

September 13, 2017 தண்டோரா குழு

நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிடக்கோரும் ஸ்டாலின் மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை நடக்கவுள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு இதுவரை ஆதரவளித்து வந்த டிடிவி.தினகரன் ஆதரவாளர்களான 21 எம்.எல்.ஏ.க்கள் முதல்வருக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக ஆகஸ்ட் 22ம் தேதி ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ளனர்.

திமுக ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 119 ஆக உள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி அரசு 113 எம்எல்ஏக்களுடன் மைனாரிட்டி அரசாக மாறிவிட்டது ஆகையால் சட்டபேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தமிழக பொறுப்பு ஆளுநரிடம் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் அளித்தார்.

எனினும், பல முறை மனு அளித்தும் சரியான நடவடிக்கை எடுக்கப்படாததால் சென்னை உயர்நீதிமன்றத்தில் மு.க.ஸ்டாலின் வழக்கு தொடர்ந்துள்ளார். இம்மனு மீதான விசாரணை நாளை நடைபெறவுள்ளது.

மேலும் படிக்க