FLASH NEWS
  • ஈரானில் உள்ள இந்திய தூதரகம் மூலம் 21 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை தேவை என முதல்வர் பழனிசாமி பிரதமருக்கு கடிதம்
  • துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து தூத்துக்குடியில் விதிகளை மீறி கூடியதாக 1720 பேர் மீது போடப்பட்ட வழக்கு ரத்து
  • டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியுடன் கமல்ஹாசன் சந்திப்பு

நடிகர் கமல்ஹாசன் தனது கட்சிப்பெயரை பதிவு செய்ய தேர்தல் ஆணையத்தில் நேரம் கேட்பு

February 13, 2018 தண்டோரா குழு

நடிகர் கமல்ஹாசன் தனது கட்சிப்பெயரை  பதிவு செய்ய தேர்தல் ஆணையத்தில் நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் பிப்.21ம் ஆம் தேதி தனது அரசியல் பயணத்தை தொடங்குவதாகவும் அன்றைய தினம் கட்சியின் பெயரை அறிவிக்க போவதாகவும் அறிவித்திருந்தார்.இதனிடையே நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் தனது அரசியல் பயணத்திற்கு ‘நாளை நமதே’ என்று பெயர் சூட்டியிருந்தார்.

இந்நிலையில்,நடிகர் கமல்ஹாசன் தனது கட்சிப்பெயரை வரும் 15 ஆம் தேதி பதிவு செய்ய நாளை மறுநாள் தேர்தல் ஆணையத்தில் நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

 

 

 

மேலும் படிக்க