FLASH NEWS
  • எஸ்.வி. சேகரை ஜூன் முதல் வாரம் வரை காவல்துறையினர் கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை
  • தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய போராட்டக்காரர்கள் மீது போலீஸார் கண்ணீர் புகைகுண்டு வீச்சு
  • ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு மேலும் 6 மாதம் அவகாசம் கேட்டு அரசுக்கு ஆணையம் கடிதம்

கோவை கள்ளிமடை பகுதியில் திமுக மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் ஆய்வு

February 12, 2018 தண்டோரா குழு

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட கள்ளிமடை பகுதியில் திமுக மாநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ இன்று ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாநகராட்சி 63 வது வட்டம், கள்ளிமடை பகுதிகளில் பல மாதங்களாக அப்பகுதியில் சாலைகள் படுமோசமாக உள்ளதையும், சாக்கடைகள் தூர்வாரப்படாமலும்,  குப்பைகள் அள்ளப்படாமலும், பொது கழிப்பறைகள் மிக மோசமான நிலையில் பராமரிக்கப்படுவதையும் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் ஆய்வு மேற்கொண்டார். இதனையடுத்து சம்பந்தப்பட்ட மாநகராட்சி உயரதிகாரிகளை நேரில் வரவழைத்து அவற்றை உடனடியாக சரி செய்ய அறிவுறுத்தினார்.

மேலும் பொதுமக்களிடத்திலும் குறைகளை கேட்டறிந்தவர்,  பொதுமக்களின் பிரச்சினைகளை  சரி செய்யாவிட்டால் பொதுமக்களைத் திரட்டி பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க