• Download mobile app
21 Jan 2019, MondayEdition - 1076
FLASH NEWS
  • தலைமைச் செயலகத்துக்குள் யாகம் செய்தால் அது மரபு மீறலா? -தமிழிசை சௌந்தர்ராஜன்
  • எந்த பக்கம் தாவினால் அரசியல் லாபம் என ஸ்டாலின் நினைக்கிறார் – துணை முதல்வர் பன்னீர்செல்வம்
  • டி.கே.ராஜேந்திரன் டிஜிபியாக செயல்பட இடைக்கால தடை கோரும் கோரிக்கையை நிகராகரித்தது நீதிமன்றம்
  • பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியாவின் கடன் 50% அதிகரிப்பு!
  • புலிகள் காப்பகத்தில் தானியங்கி கேமராக்களை கொண்டு கண்காணிக்கும் பணி தொடங்கியது!
  • பாஜக ஆதரவால் தம்பிதுரைக்கு துணை சபாநாயகர் பதவி என்ற கருத்துக்கு ஆவேச பதில்!
  • குடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை : முப்படை அதிகாரிகள், மாணவர்கள் பங்கேற்பு

கடந்த 4 நாட்களில் ரூ 602 கோடிக்கு மது விற்பனை – டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு!

November 7, 2018 தண்டோரா குழு

கடந்த 4 நாட்களில் ரூ 602 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

தீபாவளி என்றாலே பட்டாசு விற்பனையுடன் சேர்த்து மது விற்பனையும் ஜோராக இருக்கும். ஆண்டுக்கு ஆண்டு மது விற்பனை கூடிக்கொண்டேயிருக்கிறதே தவிர, குறைந்தபாடில்லை. அந்த வகையில், இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகையையொட்டி டாஸ்மாக் மது விற்பனை 320 கோடி ரூபாய் இலக்காக நிர்ணயிக்கப் பட்டிருந்தது. இதையடுத்து, நேற்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தீபாவளிப் பண்டிகையையொட்டி தொடர்ந்து 4 நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டதால், விற்பனையின் அளவு அதிகரித்திருப்பதாக டாஸ்மாக் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். கடந்த 4 நாட்களில் ரூ 602 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. அதன்படி சனி – ரூ 124 கோடி, ஞாயிறு – ரூ 150 கோடி, திங்கள் ரூ 148 கோடி, தீபாவளி நாளான நேற்று ரூ 180 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.

மேலும், கடந்த ஆண்டைப் பொறுத்தவரை அக்டோபர் 18-ம் தேதி தீபாவளி கொண்டாடப்பட்டது. அன்றய தினமும் அதற்கு முந்தைய தினமும் மொத்தமாக 536 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியிருந்தது. கடந்த ஆண்டை காட்டிலும் இந்தாண்டு 34% கூடுதலாக மது விற்பனை அதிகரித்துள்ளது.

மேலும் படிக்க