• Download mobile app
20 Feb 2019, WednesdayEdition - 1106
FLASH NEWS
  • இந்தியா தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுப்போம் – பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்
  • தமிழகத்தில் அதிமுக, பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடுவது திமுக கூட்டணிக்கு சாதகம் – திருமாவளவன்
  • “குற்றத்தை தடுக்கவும் சிசிடிவி உதவுகிறது” – ஆணையர் விஸ்வநாதன்
  • “உறுதியானது மகாராஷ்ட்ர பாஜக, சிவசேனா கூட்டணி
  • நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஓரிரு நாட்களில் அதிமுக முடிவு அறிவிப்பு – ஓபிஎஸ்
  • உயிரிழந்த தமிழக வீரர்களின் இறுதி சடங்கில் பங்கேற்கிறார் பொன்.ராதாகிருஷ்ணன்
  • வீரமரணமடைந்த தமிழக வீரர்களின் உடல்கள் திருச்சி விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன…
  • இஸ்லாம் மதத்துக்கு மாறினார் டி.ராஜேந்தர் மகன்!
  • புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் வீரமரணமடைந்த தமிழக வீரர்களின் குடும்பங்களுக்கு பாரிவேந்தர் இரங்கல்

இந்துவாக மாறினால் தான் பாஸ்போர்ட் – சுஷ்மாவிடம் முறையிட்ட தம்பதி

June 21, 2018 தண்டோரா குழு

லக்னோவில் பாஸ்போர்ட் பெறுவதற்காக விண்ணப்பித்திருந்தவரின் கணவன் முஸ்லிம் என்பதால் அவரது விண்ணப்பம் நிரகாரிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி அருகே நொய்டாவைச் சேர்ந்த ரன்வீர் சேத் என்ற பெண்,இவர் கடந்த 2007ம் ஆண்டு முகமது சித்திக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.அங்குள்ள பன்னாட்டு நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவர்களுக்கு தற்போது 6 வயதில் மகள் ஒருவர் இருக்கிறார்.கணவன் மனைவி இருவரும் பாஸ்போர்ட் பெறுவதற்காக லக்னோவில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளனர்.

இதையடுத்து ஜூன் 20ம் தேதி இருவரும் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.இதற்காக நொய்டாவில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு அவர்கள் சென்றனர்.அதில் முதல் மற்றும் இரண்டாவது சுற்று நேர்காணலுக்கு பிறகு 3வது சுற்றில்,தன்வியின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ரன்வீர் சேத்திடம் விசாரணை நடத்திய அதிகாரி,அவர் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ஒருவரை மணந்தது குறித்து விளக்கம் கேட்டார்.இருவரும் மாறுபட்ட மதத்தை பின்பற்றுவது குறித்து பல்வேறு கேள்விகளை கேட்ட அதிகாரிகள்,பெயரை மாற்றி அதனை அரசிதழில் வெளியிட்டால் மட்டுமே பாஸ்போர்ட் புதுப்பிக்க முடியும் எனக் கூறியுள்ளார்.

மேலும் ரன்வீர் சேத்தின் கணவர் முகமது சித்திக்கின் பாஸ்போர்ட்டையும் முடக்கி வைத்தனர். முரண்பட்ட தகவல்கள் இருப்பதாகவும் பாஸ்போர்ட் அதிகாரி தெரிவித்தார்.மேலும் கணவரின் பெயரை இந்து பெயராக மாற்றினால் தான் பாஸ்போர்ட் வழங்கப்படும்,இல்லை என்றால் நிராகரிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.அதற்கு சித்திக்கின் மனைவி,“எனது கணவர் முஸ்லிமாக இருப்பதில் எனது குடும்பத்திற்கே எந்த பிரச்சினையும் இல்லை” என பதிலளித்துள்ளார்.இதை கேட்ட அதிகாரி அவரை வெளியில் போகுமாறு கடும் வார்த்தைகளால் உத்தரவிட்டுள்ளார் என தெரிவித்தார்.

இதையடுத்து தனக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பாக ட்விட்டரில்,வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜூக்கு ரன்வீர் சேத் புகார் தெரிவித்தார்.அதில்,ஆதங்கத்துடன் இதை பதிவிடுகிறேன்.கணவர் முஸ்லிம் என்பதால் எனது பாஸ்போர்ட் நிராகரிக்கப்பட்டுள்ளது.12 வருட திருமண வாழ்க்கையில், இதுபோன்று ஒரு அவமானத்தை வேறு எங்கும் சந்தித்ததில்லை.பாஸ்போர்ட் அலுவலகத்தில் இதுபோன்று நிகழும் என எதிர்பார்க்கவில்லை என தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இந்த விவகாரத்தால் பெரும் சர்ச்சை ஏற்பட்டதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட பாஸ்போர்ட் அதிகாரிக்கு விளக்கம் கோரி வெளியுறவு அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சம்பந்தப்பட்ட இருவருக்கும் பாஸ்போர்ட்டும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க