• Download mobile app
16 Apr 2024, TuesdayEdition - 2988
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சம்பா ரவை பாயசம்

November 22, 2017 tamil.webdunia.com

தேவையான பொருட்கள்:

சம்பா ரவை – ஒரு கப்
துருவிய வெல்லம் – ஒரு கப்
நெய் – 3 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன்
சுக்குப்பொடி – கால் டீஸ்பூன்
முந்திரி, திராட்சை – தேவையான அளவு

செய்முறை:

2 டேபிள்ஸ்பூன் நெய்யில் முந்திரி, திராட்சையை வறுக்கவும். வெல்லத்தைக் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். சம்பா ரவையை ஒரு டேபிள்ஸ்பூன் நெய் விட்டு வறுத்து, 2 கப் நீர் விட்டு வேகவிடவும்.

ரவை வெந்ததும், வெல்லக் கரைசல் சேர்த்துக் கொதிக்கவிடவும். சேர்ந்து வரும்போது, ஏலக்காய்த்தூள், சுக்குப்பொடி, முந்திரி, திராட்சையை சேர்த்து இறக்கவும். இதில் தேங்காய்ப் பால், அல்லது வெறும் பால் சேர்க்கலாம்.

மேலும் படிக்க