• Download mobile app
19 Apr 2024, FridayEdition - 2991
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தேங்காய்ப்பால் இறால் குழம்பு

November 13, 2018 tamil.webdunia.com

தேவையான பொருட்கள்:

இறால் – அரை கிலோ
உப்பு – தேவைக்கு
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
தக்காளி – 1
புளிச்சாறு – 2 டீஸ்பூன்
வெங்காயம் – 1

அரைக்க தேவையான பொருட்கள்:

துருவிய தேங்காய் – 1 கப்
கொத்தமல்லி – சிறிதளவு
காய்ந்த மிளகாய் – 5
வெங்காயம் – 1
கறிவேப்பிலை சிறிது
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
எண்ணெய் – 1 டீஸ்பூன்

தாளிக்க தேவையான பொருட்கள்:

பெருஞ்சீரகம், கடுகு, பட்டை, கறிவேப்பிலை.

செய்முறை:

இறாலை சுத்தம் செய்து வைத்து கொள்ளவும். வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒவ்வொன்றாக போட்டு நன்றாக வறுத்து ஆற வைக்கவும். வறுத்த பொருட்கள் நன்றாக ஆறியதும் அதை மிக்சியில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பெருஞ்சீரகம், கடுகு, பட்டை, கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின்னர் அதில் வெங்காயத்தை போட்டு வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

தக்காளி நன்றாக வதங்கியதும் அதில் அரைத்த மசாலா, தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். அடுத்து அதில் புளிக்கரைசல், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

குழம்பு பதம் வந்தவுடன் அதில் சுத்தம் செய்த இறால்களை சேர்த்து 10 நிமிடங்கள் அடுப்பை சிம்மில் வைத்து கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும். சூப்பரான தேங்காய்ப்பால் இறால் குழம்பு தயார்.

மேலும் படிக்க