• Download mobile app
19 Apr 2024, FridayEdition - 2991
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

டேஸ்டியான ஓட்ஸ் டிக்கி- க்ரீன் சட்னி

June 28, 2017 tamil.boldsky.com

சட்னி செய்ய தேவையானவை:

நறுக்கப்பட்ட புதினா இலைகள் – ½ கப்

நறுக்கப்பட்ட கொத்தமல்லி – ¼ கப்

நறுக்கப்பட்ட வெங்காயம் – 2 டேபிள் ஸ்பூன்

லெமன் ஜூஸ் – ½ டேபிள் ஸ்பூன்

சர்க்கரை – ஒரு சிட்டிகை

பச்சை மிளகாய் – 2

உப்பு – சுவைக்கேற்ப

ஓட்ஸ் டிக்கி செய்ய தேவையானவை:

சமைப்பதற்கு (வேகமாக சமைக்க) உகந்த ஓட்ஸ் – 1 கப்

பன்னீர் – ¼ கப்

நறுக்கிய கேரட் – ¼ கப்

உருளைகிழங்கு – ½ கப் (வேக வைத்தது, மசித்தது)

கொத்துமல்லி தழை – 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)

லெமன் ஜூஸ் – 1 டீ ஸ்பூன்

இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் பேஸ்ட் – 1 ½ டீ ஸ்பூன்

மிளகாய் தூள் – 1 டீ ஸ்பூன்

கரம் மசாலா தூள் – ½ டீ ஸ்பூன்

அமுக்கர் தூள் – 1 டீ ஸ்பூன்

பால் – 1 டேபிள் ஸ்பூன்

வேகமாக உருட்டப்பட்ட ஓட்ஸ் (டிக்கிஸை சிறு துண்டுகளாக்க) – 1 டேபிள் ஸ்பூன்

உப்பு – சுவைக்கேற்ப

செய்முறை:

க்ரீன் சட்னி செய்வது எப்படி?

மிக்சர் க்ரைண்டரிலிருந்து சட்னி ஜாடியை (Jar) எடுத்துக் கொள்ளுங்கள். அதில், நம் பட்டியலில் குறிப்பிட்டிருக்கும் சட்னிக்கு தேவையான அனைத்து பொருட்களையும் சேர்த்து கொள்ளுங்கள்.

அந்த பொருட்களை எல்லாம் நன்றாக அரைத்து பேஸ்டை போல் ஆக்கி வைத்துகொள்ளுங்கள். அதேபோல், தேவைக்கேற்ப தண்ணீரையும் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து சரி பார்த்து கொள்ளுங்கள்.

இப்பொழுது தயாரிக்கப்பட்ட சட்னியை எடுத்து பௌலில் ஊற்றிகொள்ளுங்கள்.

அதனை பரிமாரும் வரை பதப்படுத்திகொள்ளுங்கள்.

ஓட்ஸ் டிக்கி செய்வது எப்படி?

ஒரு பெரிய கலப்பதற்கு உகந்த பௌலை எடுத்துகொள்ளுங்கள். அதில் ஓட்ஸை சேர்த்து கொள்ளுங்கள்.

அந்த ஓட்ஸில், நறுக்கிய பன்னீரையும், நறுக்கிய கேரட்டையும் சேர்த்துகொள்ள வேண்டும். அவற்றை உங்கள் கைகள் கொண்டு நன்றாக கலந்துகொள்ள வேண்டியது அவசியம்.

அந்த கலவையோடு உருளைகிழங்கையும் சேர்த்து மீண்டும் நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும்.

அந்த கலவையில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து ஈரமாக்கிகொள்ள வேண்டும். மீண்டும் நன்றாக அவை அனைத்தும் ஒன்றோடு ஒன்று இணையும் வரை, கைகளால் பிசைந்துகொள்ள வேண்டும்.

இப்பொழுது, உங்களுடைய பிசுபிசுவென இருக்கும் கைகளை கொண்டு, அந்த கலவையில் கொஞ்சம் எடுத்து உருட்டி பந்துபோல் வைத்துகொள்ள வேண்டும். அதன்பின், அந்த பந்து போன்ற உருண்டையை தட்டி…டிக்கி அல்லது பட்டிஸ் எனப்படும் உணவை போல் வைத்துகொள்ள வேண்டும்.

இந்த முறையை கொண்டு மீதமிருக்கும் கலவையையும் தட்டிகொள்ள வேண்டும். இப்பொழுது தட்டை வடிவ டவா (Tawa) ஒன்றை எடுத்துகொண்டு அதில் எண்ணெய்யை ஊற்றிகொள்ளுங்கள்.

அதில் ஒரு டிக்கியை மட்டும் எடுத்து, பாலில் நனைத்து கொள்ளுங்கள்.

அந்த டிக்கியை ஓட்ஸைகொண்டு உருட்டி முழுவதுமாக அதனை மூட வேண்டும்.

இப்பொழுது ஒவ்வொரு டிக்கியாக எடுத்து டவாவில் போட வேண்டும்.

அந்த டிக்கியின் இருப்பக்கங்களை திருப்பி போட்டு வறுக்க வேண்டும்.

அந்த டிக்கியின் நிறமானது லேசான தங்க பழுப்பு நிறத்தில் வர, டவாவைவிட்டு எடுக்க வேண்டும்.

அந்த சூடான ஓட்ஸ் டிக்கியை, சில்லென இருக்கும் க்ரீன் சட்னியுடன் சேர்த்து பரிமாறி மனம் மகிழலாம்.

மேலும் படிக்க