• Download mobile app
20 Apr 2024, SaturdayEdition - 2992
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சிக்கன் வடை செய்ய தெரியுமா…!

October 23, 2017 tamil.webdunia.com

தேவையான பொருள்கள்:

கோழி – கால் கிலோ
முட்டை – ஒன்று
பச்சை மிளகாய் – 2
பெரிய வெங்காயம் – 6
இஞ்சி – ஒரு அங்குலம்
பூண்டு – 10 பல்
தேங்காய் பூ – 1 கப்
மிளகாய் தூள் – ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
கொத்தமல்லி – ஒரு மேசைக்கரண்டி (நறுக்கியது)
எண்ணெய் – கால் கப்
உப்பு – ஒரு தேக்கரண்டி
கறி மசாலா – ஒரு தேக்கரண்டி

செய்முறை:

சிக்கனை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சியையும், பூண்டையும் மிக்ஸியில் விழுதாக அரைத்து கொள்ளவும். தேங்காயை மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்த்து அரைத்து விழுதாக எடுத்துக் கொள்ளவும்.

மிக்ஸியில் சுத்தம் செய்த சிக்கன் துண்டுகளை போட்டு தண்ணீர் சேர்க்காமல் கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் அரைத்த சிக்கனை போட்டு அதனுடன் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் முட்டையை உடைத்து ஊற்றவும்.

பிறகு அதனுடன் இஞ்சி விழுது, பூண்டு விழுது, கறி மசாலா, மஞ்சள் தூள் , மிளகாய் தூள், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் உப்பு ஆகியவற்றை போடவும். அதன் பின்னர் இவற்றுடன் நறுக்கின கொத்தமல்லி, கறிவேப்பிலை மற்றும் தேங்காய் விழுதையும் சேர்க்கவும். அனைத்தையும் ஒன்றாக கலந்து வடை மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.

சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வடை போல தட்டி எண்ணெயில் போட்டு 2 நிமிடம் வேக விடவும். அடுப்பை குறைத்து மிதமான தீயில் வைத்து செய்யவும். சுவையான சிக்கன் வடை தயார்.

மேலும் படிக்க