• Download mobile app
19 Apr 2024, FridayEdition - 2991
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கொள்ளு அடை செய்ய….

November 15, 2018 tamil.webdunia.com

தேவையான பொருட்கள்:

கொள்ளு – 2 கப்,

அரிசி – 1/4 கப்,

காய்ந்த மிளகாய் – 5,

உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

 

தாளிக்க தேவையான பொருட்கள்:

எண்ணெய் – 1 டீஸ்பூன்,

கடுகு – 1/4 டீஸ்பூன்,

சீரகம் – 1/4 டீஸ்பூன்,

சோம்பு – 1/4 டீஸ்பூன்,

உடைத்த உளுந்தம் பருப்பு – 1 டீஸ்பூன்,

வெங்காயம் – பாதி

இஞ்சி – சிறிய துண்டு,

பெருங்காயம் – சிறிதளவு

செய்முறை:

வெங்காயம், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும். கொள்ளு, அரிசி இரண்டையும் சேர்த்து 4 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். ஊற வைத்த பொருட்களை நன்றாக கழுவி அத்துடன் காய்ந்த மிளகாய் சேர்த்து கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

அரைத்த மாவில் தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து அடை மாவு பதத்தில் கலந்து வைக்கவும். கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து தாளித்து மாவில் சேர்த்து நன்றாக கலக்கவும்.

தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.  சுவையான சத்தான கொள்ளு அடை தயார்.

மேலும் படிக்க