• Download mobile app
19 Apr 2024, FridayEdition - 2991
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கேரளா ஸ்பெஷல் வாழையிலை மசாலா மீன் ரெசிபி!

February 24, 2018 tamilsamayam.com

தேவையான பொருட்கள்!

வஞ்சீரம் (அ) வவ்வால் மீன் – 2 துண்டுகள்,

வெங்காயம் – ஒன்று,

தக்காளி – ஒன்று,

இஞ்சி, பூண்டு விழுது – 2 தேக்கரண்டி,

மிளகாய்த் தூள் – ஒரு தேக்கரண்டி,

உப்பு – தேவையான அளவு,

புளி – கொட்டைப்பாக்கு அளவு,

தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு,

வாழை இலை – 2 துண்டுகள்.

செய்முறை:

மீனை சுத்தம் செய்து மசாலா தடவி சிறிது நேரம் ஊற வைக்கவும்.பின்னர் சிறிது நேரம் கழித்து வானலியில் எண்ணெய் விட்டு சூடானதும் மீனை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

வாணலில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.அதில் மிளகாய்த்தூள் சேர்த்து பிரட்டி விட்டு, புளியை கரைத்து ஊற்றி கெட்டியானதும் இறக்கவும்.

வாழையிலையின் அடிப்பாகத்தை அனலில் காண்பித்து எடுக்கவும்.பின்னர் இலையின் உள்பக்கமாக எண்ணெய் தடவி மசாலாவை அதில் வைக்கவும். அதன் மேல் வறுத்த மீனை வைக்கவும்.

மசாலா வெளியே வராதவாறு இலையை நான்கு பக்கமும் நன்றாக மூடி கட்டவும்.தவாவில் மீனுடன் வைத்து கட்டிய வாழையிலையை வைத்து மிதமான சூட்டில் வேக வைக்கவும். வாழையிலை நன்கு சுருங்க வெந்ததும் எடுக்கவும்.சுவையான அசத்தலான கேரளா ஸ்பெஷல் வாழையிலை மசாலா மீன் தயார்.

மேலும் படிக்க