• Download mobile app
29 Mar 2024, FridayEdition - 2970
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை கலவரத்தில் கைது செய்யப்பட்டவர்களில் பலர் அப்பாவிகள்- பொன்.ராதாகிருஷ்ணன்

October 1, 2016 தண்டோரா குழு

சசிகுமார் கொலை வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க சிபிசிஐடி விரைந்து நடவடிக்கை எடுத்து வருவது வரவேற்கதக்கது.கோவை கலவரத்தில் கைது செய்யப்பட்டவர்களில் பலர் அப்பாவிகள் என மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கோவை துடியலூர் பகுதியில் இந்து முன்னணி பிரமுகர் கடந்த 22ம் தேதி சசிகுமார், மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டார். இவரது இறுதி ஊர்வலத்தின் போது கடைகள் அடைக்கப்பட்டு, வன்முறை சம்பவங்கள் நடந்தது. இது தொடர்பாக நூற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினரிடம் மனுக்களை பெறுவதற்காக மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கோவை வெள்ளக்கிணறு பகுதிக்கு வந்திருந்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், சசிகுமாரின் படுகொலையை அடுத்து வியாபாரிகள் தானாக முன்வந்து கடைகளை அடைத்துள்ளனர். சசிகுமாரின் இறுதி ஊர்வலத்தின் போது, பயங்கரவாதிகள் ஊடுருவி, கற்களை வீசி கலாட்டா செய்துள்ளனர். குற்றவாளிகளுக்கு பதிலாக அப்பாவிகளை கைது செய்துள்ளது சரியானதல்ல. கைது செய்யப்பட்டுள்ளவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்.

இது உள்ளாட்சி தேர்தல் காலம் என்பதால், தேர்தலில் போட்டியிடும் பலரின் மீது எப்.ஐ.ஆர்.பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் பலர் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கலவரத்தில் கைது செய்யப்பட்டவர்கள் திருச்சி, கோவை, ஈரோடு உள்ளிட்ட பல இடங்களில் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். கைது செய்யப்பட்டவர்கள் குறித்த பட்டியலையும், அவர்கள் எந்த சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்ற விபரத்தையும் போலீசார் வெளியிட வேண்டும் என்றார்.

மேலும் காவிரி விவகாரம் மற்றும் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்த செய்தியாளர்களின் கேள்விகளுக்கு தன்னால் பதிலளிக்க முடியாது எனவும், தான் சசிகுமார் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினரிடம் மனுக்களை பெறவே வந்தேன் எனதெரிவித்தார்.

மேலும் படிக்க