• Download mobile app
29 Mar 2024, FridayEdition - 2970
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவில்கள் குறித்து சர்ச்சை வசனம் நடிகை ஜோதிகா மீது இந்து மக்கள் கட்சி புகார் !

February 16, 2018 தண்டோரா குழு

பாலாவின் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள நாச்சியார் படத்தில் நடிகை ஜோதிகா கோவில்கள் குறித்து சர்ச்சையான வசனத்தை பேசியுள்ளதாக இந்து மக்கள் கட்சியினர்  புகார் அளித்துள்ளனர்.

இயக்குநர் பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜீ.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் நாச்சியார். இந்த திரைப்படத்தின் டீசர் வெளியிட்ட போது காவல்துறை அதிகாரியாக வரும் ஜோதிகா டீசரில் கெட்ட வார்த்தை பேசுவது ஹைலைட்டாக காட்டப்பட்டிருந்தது அது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இதற்கிடையில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாச்சியார் படம் இன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், நடிகை ஜோதிகா, இயக்குனர் பாலா மீது வழக்கு பதிய வேண்டும் என்று இந்து மக்கள் கட்சியினர் சென்னை மாநகர காவல்துறை ஆணையரகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.

அதில், நாச்சியார் படத்தில் நடிகை ஜோதிகா போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். அவர் பேசும் வசனத்தில் ‘கோயிலா இருந்தாலும் குப்பை மேடா இருந்தாலும் எங்களுக்கு ஒன்று தான்’ என்று இடம்பெற்றுள்ளது.இந்து ஆலயங்களை அவமதிக்கும் விதமாகவும், இந்து மதத்தை புண்படுத்தும் விதமாகவும் இந்த வசனம் இடம்பெற்றுள்ளது. ஜோதிகா பேசும் வசனம் மூலம் அவர்களின் நோக்கம் தெள்ளத் தெளிவாகிறது.இஸ்லாமிய மதத்தை சேர்ந்த நடிகை ஜோதிகா மதகலவரத்தை தூண்டும் எண்ணத்தில் இந்த வசனத்தை பேசியுள்ளார். எனவே சர்ச்சைக்குரிய வசனத்தை படத்தில் இருந்து நீக்க வேண்டும் நாச்சியார் படத்தை தடை செய்ய வேண்டும்.

இந்து மக்கள் கட்சியின் மாநிலத்தலைவர் அர்ஜூன்சம்பத் ஆணையின் படி இந்த வசனத்திற்கு காரணமான இயக்குனர் பாலா மற்றும் நடிகை ஜோதிகா மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க