FLASH NEWS
  • சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா சிலை திறப்பு
  • காவிரி மேலாண்மை வாரியம் விவகாரம்: மோடியை சந்திக்க அனைத்துக் கட்சி தலைவர்கள் அடுத்த வாரம் டெல்லி பயணம்

விமலுக்கு அடித்த திடீர் யோகம்!

February 13, 2018 tamilsamayam.com

‘மன்னர் வகையறா’வைத் தொடர்ந்து பல படங்கள் விமல் கைவசம் வந்துள்ளது.

விமல் சொந்தமாகத் தயாரித்து, நடித்த படம் ‘மன்னர் வகையறா’. படம் ரிலீஸாகி 3 வாரங்கள் ஆனாலும், தமிழகம் முழுக்க இன்னும் பல தியேட்டர்களில் ஓடிக் கொண்டுள்ளது.

இப்படத்தை தொடர்ந்து விமல், வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் ‘கன்னி ராசி’ படம் தயாராக உள்ளது. மார்ச் மாதம் இந்த படம் ரிலீஸாக உள்ளது.

அதை தொடர்ந்து சற்குணம் தயாரிப்பில் விமல், ஓவியா நடிக்கும் ‘கே 2’ படம் தயாராகி வருகிறது. தவிர, இன்னும் 5 புதிய படங்களில் கமிட்டாகியுள்ளார் விமல்.

‘வெற்றிவேல்’ இயக்குநர் வசந்தமணி, ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளர் அசோக், குறும்பட இயக்குநர் விஜய் உள்பட 5 இயக்குநர்களின் படங்களில் நடிக்க கமிட்டாகியுள்ளார் விமல்.

 

மேலும் படிக்க