FLASH NEWS
  • பாலியல் புகார் எதிரொலி : மத்திய வெளியுறவு இணையமைச்சர் எம்.ஜே.அக்பர் பதவி விலகினார்
  • சபரிமலை கோயிலுக்கு செல்லும் பெண்களை தடுத்து நிறுத்த முயன்ற 15 பெண் போராட்டக்காரர்கள் கைது!
  • ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி திருநாளையொட்டி முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து
  • துர்காஷ்டமியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து

ஒரு குப்பைக் கதை படம் மைனா போன்ற தாக்கத்தை ஏற்படுத்தும் – உதயநிதி ஸ்டாலின்

May 16, 2018 தண்டோரா குழு

பாகன்’ படத்தை இயக்கிய அஸ்லாம் தயாரிக்க, புதுமுக இயக்குநர் காளி ரங்கசாமி இயக்கும் படம் ‘ஒரு குப்பைக் கதை’. தமிழ் சினிமாவின் முக்கிய நடன இயக்குநராக வலம் வரும் மாஸ்டர் தினேஷ், இப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆகவுள்ளார்.

இந்தபடத்தில் மனிஷா யாதவ் நாயகியாக நடித்துள்ளார். ரெட் ஜெயண்ட் மூவிஸ் படத்தை வெளியிடுகிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது.


அவ்விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின்,

எனது முதல் மூன்று படங்களுக்கும் தினேஷ் மாஸ்டர் தான் நடனம் சொல்லிக் கொடுத்தார். “தினேஷ் மாஸ்டருக்கும், எனக்கும் ஒரு நல்ல நட்பு இருக்கிறது. இவர் ஏன் ஹீரோவாக நடிக்கிறார் என்று முதலில் யோசித்தேன். பின்னர் படம் பற்றி கேள்விப்பட்ட நான், படத்தை நாமே வெளியிடலாம் என்று முடிவு செய்தேன். ஒரு குப்பைக் கதை படம் மைனா போன்ற தாக்கத்தை ஏற்படுத்தும். நல்ல படங்கள் வந்தால் பாராட்டுவதும், சுமாரான படங்களை விமர்சிப்பதும் வழக்கம் தான். அந்த வகையில் இந்த படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வரும் என்று நம்புகிறேன். படம் மே 25-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது” எனக் கூறினார்

மேலும் படிக்க